இங்கிள்வுட், கலிபோர்னியா
இங்கிள்வுட் (Inglewood), ஐக்கிய அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்கு கலிபோர்னியா பிரதேசத்தின் அமைந்த லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியின் தலைமையிடமான லாஸ் ஏஞ்சலஸ் பெருநகரத்தின் ஒரு பகுதியாகும். இது லாஸ் ஏஞ்சலஸ் நகரத்திற்கு தென்மேற்கே 25.7 மைல் தொலைவில் உள்ளது. இங்கிள்வுட நகரத்திற்கு தென்கிழக்கே 3.6 மைல் தொலைவில் லாஸ் ஏஞ்சலஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. இவ்வூரில் கால்பந்து விளையாட்டு போன்ற தொழில்முறை விளையாட்டு அணிகள் அதிகம் உள்ளது. 2020ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இங்கிள்வுட் நகர மக்கள் தொகை 1,07,762 ஆகும்.
Read article